எவ்வாறு பயன்படுத்துவது

How to use the Easy English scheme
kid-3.jpg

எவ்வாறு Easy English திட்டத்தை பயன்படுத்துவது

  • இந்த புத்தகத்தைப் பயன்படுத்துவதற்கு உங்கள் பிள்ளை ஒவ்வொரு புத்தகத்தையும் ஒவ்வொரு பக்கமாகவும் ஒன்றின் பின்னால் ஒன்றாகவும் பின்பற்ற வேண்டும்.
  • அடுத்த புத்தகத்திற்கு முன்னேறுவதற்கு முன், உங்கள் பிள்ளை ஒவ்வொரு புத்தகத்திலும் பரிட்சயமாக உணரும் வரை அந்தப் புத்தகத்தை பல தடவை படிக்க இடமளியுங்கள். உங்கள் பிள்ளை இந்த திட்டத்தை அவன் அல்லது அவளின் வேகத்திற்கேற்ப பின்பற்றலாம். தேர்வுகள் அல்லது பரீட்சைகள் இங்கு இல்லை. ஒரு சுவாரஸ்யமான வழியில் ஆங்கில மொழியை அடைந்து கொள்வதற்கான திட்டமாகவே இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • அடுத்த பக்கத்திற்கு முன்னேறும் முன், உங்கள் பிள்ளை ஒவ்வொரு பக்கத்திலும் பரிட்சயமாகவும் சரளமாகவும் ஆவதற்கு உதவி செய்யுங்கள்.
  • உங்கள் பிள்ளை புத்தகத்தில் உள்ள சொற்களை/வாக்கியங்களை பின்தொடரும்போது, CD யிலுள்ள பொருத்தமான ஒலிக் கோப்புகளை கேட்க உதவி செய்யுங்கள்.
  • உங்கள் பிள்ளை அவர்கள் வாசிக்கும் சொற்களின் அர்த்தங்களையும் அறிந்திருக்க வேண்டும். ஆகவே Book 1 யை பயன்படுத்துங்கள். அத்தோடு கற்றலை சுவாரஸ்யமாகவும் வேறுபட்ட வகையான கற்பவர்களின் கற்றலை பூரணமாக்கும் ஃபிளாஷ் அட்டைகளையும் பயன்படுத்துங்கள்.
  • உங்களுடைய பிள்ளை விரும்புகின்ற வரைக்கும் ஃபிளாஷ் அட்டைகளையும் பொருத்தமான புத்தகங்களையும் பல தடவைகள் பயன்படுத்துங்கள். ஆகவே அவன் அல்லது அவள் நம்பிக்கையுடன் அடுத்த புத்தகத்திற்கு முன்னேறலாம்.

Easy English Book 1 உங்களுடைய சொற் புத்தகமாகும். பட்டியலிடப்பட்ட அனைத்து ஆங்கிலச் சொற்களின் அர்த்தங்களையும் தமிழில் நீங்கள் காண்பீர்கள்.

 

புத்தகம் 2 தொடக்கம் 6 வரை சொற் புத்தமானது பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு புத்தகமும் ஓர் வண்ணக் குறியீட்டைக் கொண்டுள்ளது. உதாரணமாக Book 2 நீல வண்ணத்தால் குறியிடப்பட்டுள்ளது. ஆகவே Book 2 வின் கதையை நீங்கள் வாசிக்கும் முன், எவ்வாறு Book 2 வில் உள்ள சொற்களையும் அதன் அர்த்தத்தையும் வாசிக்க வேண்டுமென்பதை உங்கள் பிள்ளைகள் அறிந்து கொள்ள வேண்டும்.
புத்தகம் 1 இல் உள்ள சொற்கள் மற்றும் பொருத்தமான ஃபிளாஷ் அட்டைகளும், ஏனைய புத்தகங்களிலும் (3,4,5 மற்றும் 6) வண்ணக் குறியிடப்பட்டுள்ளது.

 

நீங்கள் புத்தகங்களை வாசிக்கத் தொடங்கும் போது, வாசிக்கும் புத்தகங்களின் இடது கைப் பக்கங்களில், வலது கைப் பக்கங்களில் உள்ள சொற்களை வாசிப்பதற்கு நீங்கள் தெரிந்து கொள்ளத் தேவையான சொற்களைக் காண்பீர்கள். இது உங்கள் பிள்ளையின் வாசிப்பை இலகுபடுத்த உதவும்.

 

ஆரம்பிப்பதற்கு முன் நாம் எழுத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும். நாம் இங்கு ஓர் வேறுபாட்டை நிலைநாட்ட வேண்டும். CAPITALS இல் உள்ள எழுத்துக்கள் பெயர் எழுத்துக்களாகும். எளிய எழுத்துருவில் உள்ள எழுத்துக்கள் ஒலி எழுத்துக்களாகும். இந்த Easy English வாசிப்புத் திட்டத்தில்


ஒலி எழுத்துக்களையே நாம் பயன்படுத்துகின்றோம்.

பெயர் எழுத்துக்கள் பின்வருவனவாகும் :
ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ

 

நாம் இப்போது மிகவும் முக்கியமான ஒலி அல்லது ஃபோனிக்ஸ் எழுத்துக்களில் கவனம் செலுத்துவோம். CD யை மிகவும் கவனமாக செவிமடுத்து ஒலி எழுத்துக்களை பின்பற்றுவோம்.

 

Abcdefghijklmnopqrstuvwxyz

 

இப்போது எழுத்துக்களின் ஃபோனிக்ஸ் ஒலிகளை செவிமடுத்துவிட்டீர்கள். இப்போது எங்களோடு சேர்ந்து கேட்டு மீண்டும் முயற்சி செய்யுங்கள்.

 

இப்போது இலகுவான சில சொற்களை முயற்ச்சி செய்வோம்.
c a t – cat
h a t – hat
m a n – man
j a m – jam

 

இங்கு ‘e’ யானது ஈ சத்தமாகும்
r e d – red
g e t – get

 

I யானது ‘ஐ’ சத்தத்துடன் உச்சரிக்கப்படும்
i n – in
s i t – sit

 

o வானது ஓ என்று உச்சரிக்கப்படும்
b o y – boy
d o g – dog

 

U வானது u வாக உச்சரிக்கப்படும்
s u n – sun
b u n – bun

 

y யானது ஐ என்று உச்சரிக்கப்படும்
s k y – sky

 

சில வேளை e யானது ஐ ஒலியைக் கொண்டிருக்கும்
h e – he
b e – be

 

ஆரம்பிப்போம். புத்தகம் 2 இற்கான சொற்கள் அடுத்த பக்கங்களில் உள்ளன.

Get in touch